தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றிய அரசின் நிதியை நேரடியாகப் பெற... அண்ணாமலை கேட்பது அது ஒன்றைத்தான்! - 80% of the Union Government funds are used for all projects in Tamil Nadu

மரக்காணம் ஒன்றியத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றிய அரசின் 80 விழுக்காடு நிதி பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டினார்.

By

Published : Oct 2, 2021, 2:09 PM IST

Updated : Oct 2, 2021, 5:04 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் பாஜக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் மரக்காணம் அருகே சிறுவாடியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கி மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கலைவாணி ராஜேந்தின், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் சங்கீதா சுந்தர் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

ஒன்றிய அரசின் நிதியை நேரடியாகப் பெற இதச் செய்யுங்க!

பின்னர் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு 80 விழுக்காடு நிதியுதவி அளிக்கிறது. மாநில அரசு 20 விழுக்காடு நிதியைத்தான் கொடுக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் குழாய்கள் அமைத்து அதிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் முழுக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம்தான் செயல்படுத்தப்படும்.

இதுபோல் ஒன்றிய அரசின் நிதியைப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்று பயன்பெற வேண்டும் என்றால் பாஜக, கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:'இனி பழைய துரைமுருகனைப் பார்க்கப் போறீங்க; நான் உங்களுடைய அமைச்சர்!'

Last Updated : Oct 2, 2021, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details