விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநாதசுவாமி ஆசிரியர் ஜான்பால். இவரது மகன் ரெமி கிளாட்வின் (8). நேற்று (டிச. 21) மாலை 3 மணியவில் சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி வந்தார். திடீரென சிறுவன் காணாமல் போனதால், அவனை பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சிறுவன்
பக்கத்து தெருவில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே சிறுவனின் சைக்கிள் கிடந்ததாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதி முழுவதும் தேடினர். அப்போது வீட்டின் கழிவு நீர் தொட்டியில் சிறுவன் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 10 அடி ஆழம் உள்ள தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர்.