தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல் வீசி வழிப்பறி செய்த 8 இளைஞர்கள் கைது - விழுப்புரம் போலீஸ் அதிரடி! - villupuram police

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்ட நான்கு சிறார்கள் உட்பட எட்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கல் வீசி வழிபறி செய்த 8 இளைஞர்கள் கைது-விழுப்புரம் போலிஸ் அதிரடி!

By

Published : May 10, 2019, 3:19 PM IST

விழுப்புரம் மாட்டத்தில், கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்சாலையில் பேருந்துகளின் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்றுவந்தது. குறிப்பாக சேலம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மீது, இரு சக்கர வாகனத்தில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் வெறித்தனமாக கல் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுபோல கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையில் 12 பேருந்துகளின் கண்ணாடிகளை அந்தக் கும்பல் உடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, பரணி, மணவாளன், மணிவண்ணன், சந்துரு, மணிகண்டன், அஜீத், விஜய் ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்வீச்சு தாக்குதல் நடத்தி வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மேலும் 12 பேருந்துகள் உட்பட ஒரு காவலர் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கல் வீசி வழிபறி செய்த 8பேர் கைது-விழுப்புரம் போலிஸ் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details