சென்னை: தாம்பரத்தைச் சேர்ந்தவர் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மாஸ்டர் சர்வேஷ். இவர், தரமான கல்வி, நிலையான வளர்ச்சி, அனைத்து மக்களும் பட்டினி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், அதனை 2030ஆம் ஆண்டு இறுதிக்குள் அடைந்து விட வேண்டும் என்கிற குறிக்கோளை முன்வைத்து கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை சுமார் 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டத்தினை தொடங்கியுள்ளார்.
750 கி.மீ., தொடர் ஓட்டன் - விழுப்புரம் வந்த மாணவர் - தொடர் ஓட்டப் பயணம்
கன்னியாகுமரியில் இருந்து 750 கிலோ மீட்டர் தொடர் ஓட்டப்பயணம் மேற்கொண்டு வரும் சிறுவன் இன்று விழுப்புரம் வந்தடைந்தார்.
![750 கி.மீ., தொடர் ஓட்டன் - விழுப்புரம் வந்த மாணவர் விழுப்புரம் வந்த மாணவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13347980-thumbnail-3x2-vpm.jpg)
விழுப்புரம் வந்த மாணவர்
விழுப்புரம் வந்த மாணவர்
இந்நிலையில், மாணவர் சர்வேஷ் இன்று (அக்.13) விழுப்புரம் வந்தடைந்தார். அவருக்கு காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் வழியாக சென்னையை நோக்கி மாணவன் சர்வேஸ் தன்னுடைய தொடர் ஓட்டத்தை தொடர்ந்தார்.
இதையும் படிங்க:காந்தி ஜெயந்தி - பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 தொடக்கம்