விழுப்புரம்:சிந்தேரிக்கரையை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று (ஜூலை 19) தன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...முதியவர் மீது பாய்ந்தது போக்சோ... - சிறுமிக்கு பாலியல் தொல்லை
விழுப்புரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
![13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...முதியவர் மீது பாய்ந்தது போக்சோ... sexual harassment case 75 years old arrested in pocso 75 years old arrested in pocso in villupuram villupuram news villupuram latest news 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை பாலியல் தொல்லை சிறுமிக்கு பாலியல் தொல்லை விழுப்புரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15873962-738-15873962-1658301811131.jpg)
பாலியல் தொல்லை
இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.