விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் முருகன் தலைமையிலான குழுவினர் கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டபோது அவர், விழுப்புரம் பூந்தமல்லி தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் முத்து (72) என்பதும், தனது சொந்த வேலைக்காக புதுச்சேரிக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது.