தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகர் கொலை வழக்கில்  7 பேர் கைது! - 7 arrested in DMK murder case

விழுப்புரம்: திமுக பிரமுகர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

DMK murder case

By

Published : Nov 24, 2019, 9:03 AM IST

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேரந்தவர் பாலாஜி (38). திமுக வட்டச் செயலாளரான இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து விழுப்புரம் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், பாலாஜி கொலையில் தொடர்புடையதாக விழுப்புரம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா (45), விஜயகுமார்(25), மன்னர்மன்னன்(45), தினேஷ்(28), அய்யனார்(32), மகேஷ்(27), சண்முகம்(46) ஆகிய ஏழு பேரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது!

மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலாஜிக்கும், ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாகவே கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:

நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி! அமைச்சர் சி.வி.சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details