தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலில் சேர்க்கப்படாத 60 ஆயிரம் வாக்காளர்கள்- விழுப்புரம் ஆட்சியர் - Villupuram Collector Anna Durai

விழுப்புரம்: மாவட்டத்தில் 18 முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளர்கள் 60 ஆயிரம் பேர் பட்டியலில் சேராமல் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

60 thousand new voters not included in the list said Villupuram Collector
60 thousand new voters not included in the list said Villupuram Collector

By

Published : Nov 16, 2020, 3:46 PM IST

விழுப்புரம் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் 01.01.2021ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி இன்று(நவ.16) முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்ரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய ஏழு தொகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 957 வாக்குச்சாவடிகள் உள்ளன.மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 519 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேரும் உள்ளனர். மேலும் 198 திருநங்கைகளும் உள்ளனர்.

வாக்காளர்கள் தங்களது சந்தேகங்களை தெரிந்துகொள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18-19 வயதுக்குட்டப்பட்டவர்கள் மொத்தம் 74 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 14 ஆயிரம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். மற்றவர்களையும் சேர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: 6.10 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details