விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கணேசன்- தமிழ்ச்செல்வி தம்பதி. இவர்களது மகள் சிந்துஜா, அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேர்த்து வருகிறார். சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2ஆவது பரிசாக 500 ரூபாய் பரிசுத்தொகை பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.
தற்போது கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருவதால், நோய் பாதிப்புகள் குறைய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.