தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட 573 எரிசாராய கேன்கள் பறிமுதல்! - எரிசாராய கேன்கள் பறிமுதல்

விழுப்புரம்: மகாராஷ்டிராவிலிருந்து புதுச்சேரிக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட எரிசாராய கேன்களை விழுப்புரம் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டன.

arrack
எரிசாராய கேன்

By

Published : May 24, 2021, 1:02 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்டது, ஞானோதயம் சோதனைச் சாவடி. நேற்றிரவு (மே.23) வளத்தி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அந்த லாரியில், மகாராஷ்டிராவிலிருந்து சட்டவிரோதமாக 573 கேன்களில் எரிசாராயம் கடத்தி வரப்பட்டுள்ளது. அந்த லாரியை, இக்ராம் (50) என்பவர் ஓட்டி வந்தார். அவரடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த எரிசாராய கேன்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். கடத்தி வரப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சாலையோரம் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்: காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details