விழுப்புரம்: பண்ருட்டி என்.எல்.புரத்தை சேர்ந்த ரஜினிகாந்த்(36) என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மகன் கவிசர்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வாணியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது. IFET கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதி வேகத்தில் எதிரே வந்து கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக முதலாவதாக வந்த தனியார் கல்லுாரி பேருந்து ரஜினிகாந்தின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைகுலைந்த ரஜினி, கவிசர்மா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கவிசர்மா(5) உயிரிழந்தார்.