விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தென்பசியார் ஏரிக்கரை பகுதியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கடந்த மாதம் 21ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த 120 லிட்டர் எரிசாராயம், போலி மதுபானம் நிரப்பி வைத்திருந்த 180 மில்லி கொள்ளளவு கொண்ட இரண்டாயிரத்து 100 பாட்டில்கள், 550 காலி பாட்டில்கள், ஆயிரத்து 500 போலி ஸ்டிக்கர்கள், மூடிகள், இயந்திரங்கள், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பேரல்கள், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏழு கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.