திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் பட்டி அமைத்து, மேய்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலையில் வழக்கம்போல் ஆட்டுக் குட்டிகளை பட்டியில் அடைத்துவிட்டு, ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். பின்பு, மாலையில் பட்டிக்குத் திரும்பிய சேகர், ஆடுகளை பட்டியில் அடைத்தார்.