புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரத்தின் பொம்மையார் பாளையம் கிராமத்தில் உள்ள தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றபோது, தனது நான்கு வயது மகள் ரூபிஷேரிங்கையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை விட்டுவிட்டு அருணகிரி கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அருணகிரி அக்கம்பக்கத்தினருடன் இணைந்து குழந்தையை தேடியுள்ளார்.