தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் கொள்ளை - Alathur theft

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கிராமத்தில் அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 36 பவுன் தங்கநகைகள், ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alathur rice mill owner house theft
அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 36 பவுன் தங்க நகைகள்,ரூ. 2 லட்சம் கொள்ளை

By

Published : Feb 20, 2021, 3:22 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகன் குமார்(36). இவர் அதே ஊரில் சொந்தமாக அரிசி ஆலை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு வயதில் சிவகார்த்தி என்ற மகனும் உள்ளார்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது வீட்டைப் பூட்டி விட்டு புதுவையிலுள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரும், அவரது மனைவியும் சென்று சிகிச்சை முடித்துவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 36 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, மரக்காணம் காவல்துறையினருக்கு குமார் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டில் நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் திக்... திக்...!

ABOUT THE AUTHOR

...view details