தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 3,360 மதுபாட்டில்கள் பறிமுதல்! - விழுப்புரம் மதுபாட்டில்கள் கடத்தல்

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

கடத்தி வரப்பட்ட 3,360 மதுபாட்டில்கள் பறிமுதல்!
கடத்தி வரப்பட்ட 3,360 மதுபாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Dec 20, 2019, 3:53 AM IST

விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல் துறையினர் இன்று பனையபுரம் பகுதியில் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.

கடத்தி வரப்பட்ட 3,360 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தொடர்ந்து வாகனத்தில் நடத்திய சோதனையில் எவ்வித முன் அனுமதியோ, உரிமமோ இன்றி 70 பெட்டிகளில் 3,360 மதுபான பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

மதுபாட்டில்கள்

இதையும் படிங்க: புதுச்சேரியில் 5 லிட்டர் பீர் கேன் அறிமுகம்: மதுப்பிரியர்கள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details