தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா! - 33 new corona positive cases reported in Villupuram

விழுப்புரம்: ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா!
விழுப்புரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா!

By

Published : May 4, 2020, 10:00 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பியவர் 418 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் அனைவரும் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 53 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கரோனா தொற்று அறிகுறிகளுடன் 106 பேர் வரை மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.

விழுப்புரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா!

இதற்கிடையில் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களின் உறவினர்கள் மீட்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details