இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தடை உத்தரவை மீறியதாக விழுப்புரத்தில் நேற்று (12.04.2020) மட்டும் 184 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு - விழுப்புரத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 3,174 வழக்குகள் பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 3,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,174 cases filed against cufew violance in vilupuram district
கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் நேற்றுவரை மாவட்டத்தில் மொத்தம் 3,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2,356 இருசக்கர வாகனங்கள், 49 மூன்று சக்கர வாகனங்கள், 32 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.