தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சம்: விழுப்புரத்தில் 3 வார்டுகளுக்கு சீல்

விழுப்புரம்: மாவட்டத்தில் மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து நகராட்சியிலுள்ள 6, 7,8 ஆகிய வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 wards were Sealed in Villupuram for corona prevention activities
3 wards were Sealed in Villupuram for corona prevention activities

By

Published : Mar 31, 2020, 1:08 PM IST

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிகரையைச் சேர்ந்த 17 பேர், கடந்த 23ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் நகரில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் சிலருக்கு கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டனர்.

இவர்களது ரத்த மாதிரிகளின் பரிசோதனையில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் முகாமிட்டு ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான 6,7,8 ஆகிய வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details