தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 3:24 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்தில் ரூ.3.39 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணி!

விழுப்புரம்: வளவனூர் ஏரியில் ரூ.3.39 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணியை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.

lake-dredged-project-at-villupuram
lake-dredged-project-at-villupuram

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.29.93 கோடி செலவில் 7882.14 ஹெக்டர் நிலத்திற்கு பாசனவசதி பெறும் வகையில் 49 ஏரிகள், இரண்டு அணைகளின் வாய்க்கால்களைப் புனரமைக்கும் பணிகள் குடிமராமத்துப் பணியின்கீழ் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவந்தது.

அதையடுத்து கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பணிகள் நிறுத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் ஏரியில் ரூ.3.39 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணியை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.

அப்பணியின் மூலம் 1,158 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா. பி. சிங், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:செங்குணம் பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details