விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே எருக்கம்பட்டு கிராமத்தில் நடந்த இறப்பு நிகழ்ச்சிகாக, சேலம் மாவட்டம் பெத்தநயாக்கன்பாளையம் பகுதியில் இருந்து மினி டெம்போ மூலம் 20-க்கும் மேற்பட்டோர் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கும்போது மட்டப்பட்டு தரைபாலம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கீழ் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் ஆண்டி, சடையாச்சி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூவர் பலி! - road accident
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே மலைப்பாதையில் இருந்து சரக்கு வாகனம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூவர் பலி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3295407-538-3295407-1557988618466.jpg)
படுகாயமடைந்த 15 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், அங்கிருந்து ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அப்போது, செல்லும் வழியிலே ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற கரியலூர் காவல் நிலையத்தினர், ஓட்டுநர் செல்வம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.