கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வன பகுதியில் முறைகேடாக சிலர் சாராயம் காய்ப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு உள்ளிட்ட ஐந்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கல்வராயன் மலையில் உள்ள பொரசம்பட்டு, குரும்பலுார், நாரணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் சோதனை நடத்தினர்.
வனப்பகுதியில் சாராயம் பதுக்கல்: கண்டுபிடித்து அழித்த காவல்துறை! - கள்ள சாரயத்தை கண்டு பிடித்த காவல்துறை
விழுப்புரம்: கல்வராயன் மலையில் பதுக்கி வைத்திருந்த 2,500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.
saarayam
அப்போது, கல்வராயன் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து வைத்திருந்த 2,500 லிட்டர் சாராய ஊறல்கள், 400 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். பின் அவற்றை தரையில் உற்றி அழித்தனர்.