விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுக்காவிலுள்ள ஞானோதயம் சோதனைச் சாவடியில் வளத்தி காவல் நிலைய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நள்ளிரவில் சட்டவிரோதமாக செஞ்சியிலிருந்து பெங்களூருவிற்கு கண்டெய்னர் லாரியில் 24 டன் எடைகொண்ட நான்கு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நள்ளிரவில் 24 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: இருவர் கைது - seized in check post
விழுப்புரம் : செஞ்சியிலிருந்து கண்டெய்னர் லாரியில் பெங்களூருவிற்கு கடத்த முயன்ற 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முரளி, கிளீனர் மணிகண்டன் ஆகியோரை வளத்தி காவல்து றையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
இச்சோதனை சாவடியில், இதேபோன்றுகடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிச்சாராயம், ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்டவற்றை வளத்தி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமனம்!