தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வராயன் பகுதியில் 2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு ! - 2000 liter alcohol seized in kalvarayan hills

விழுப்புரம்: கல்வராயன் மலைப்பகுதிகளில் 2,000 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

2000 liter alcohol seized in kalvarayan hills

By

Published : Aug 20, 2019, 6:11 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இராமநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அவர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் ஒரு குழு கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களை தேடும் பணியில் இறங்கியது.

இந்நிலையில், கரியாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்பாச்சேரி, கிணத்தூர் நீரோடை பகுதிகளில் 2,000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details