தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு! - கள்ளக்குறிச்சி இருசக்கர வாகன விபத்து

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

2-youngsters-died-in-govt-bus-two-wheeler-clash-in-thirukovilur
அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

By

Published : Dec 31, 2019, 11:53 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள லா.கூடலூர் பகுதியைச் சேர்ந்த அஜித், தீனா ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வெண்கலம் பகுதியில் இருந்து திருக்கோவிலூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் திருக்கோவிலூரிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த லா.கூடலூர் பகுதியைச் சேர்ந்த அஜித், தீனா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பி ஓடிய அரசுப் பேருந்தின் ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details