தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சி அருகே 180 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்! - 180 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்!

விழுப்புரம்: சட்ட விரோதமாக வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செஞ்சி அருகே 180 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
செஞ்சி அருகே 180 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

By

Published : Apr 26, 2021, 10:02 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், தனி பிரிவு காவல்துறையினர் சிட்டாம் பூண்டி கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், சட்டவிரோதமாக 1.80 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிட்டாம்பூண்டி சுந்தரமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், செஞ்சி காவல் சுற்று வட்டாரங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றிய ஆக்சிஜன் மனிதன்

ABOUT THE AUTHOR

...view details