தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டிவனத்தில் 178 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! - vilupuram latest news

விழுப்புரம்: திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் உணவகம் எதிரே, மது விலக்கு அமல் பிரிவு காவல் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டபோது 178 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்செய்தனர்.

எரிசாராயம் கடத்தல்
காரில் கடத்தி வரப்ப எரிசாராயம்ட்ட

By

Published : Mar 18, 2021, 4:06 PM IST

திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் உணவகம் எதிரில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வனஜா தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக விஜிலென்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தினர்.

இதில் அக்காரில் 178 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில் அவர் திண்டிவனம் ஏரி கோடி தெருவைச் சேர்ந்த ராஜா என்கிற மருவூர் ராஜா (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்து எரிசாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: ஏனாம் தொகுதியில் போட்டியிடும் ரங்கசாமியை எதிர்த்து வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details