கள்ளக்குறிச்சி:திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மண்டபம் பகுதியில் கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பள்ளி மாணவன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு இன்று (மே15) அதிகாலை தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உயிரிழந்த நிலையில் இருந்த பள்ளி மாணவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில்; உயிரிழந்த மாணவர் திருக்கோவிலூர் அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மகன் கோகுல் வயது 17 என்பதும், கொலைசெய்யப்பட்ட இளைஞர் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.