தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஒண்றிணைவோம் வா, விடியும் வா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்துவர முயற்சி செய்துவருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் இன்று திமுக மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.