தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: 143 வழக்குகள் பதிவு! - விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு மீறல்: 143 வழக்குகள் பதிவு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக மாவட்டத்தில் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

By

Published : Mar 25, 2020, 10:26 PM IST

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "கரோனா வைரஸ் நோய் தீவிரமாக பரவிவரும் சூழ்நிலையில் தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் வாகனங்களில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது பொதுமக்களிடம் தொற்று நோயை பரப்பும் நோக்கில் அலட்சியமாக செயல்படுவது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுவது, நோய்கட்டுப்பாடுகளுக்கு கீழ் படியாமல் நடப்பது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழும்,

மேலும், அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ், விழுப்புரம் உட்கோட்டத்தில் 82 வழக்குகள், திண்டிவனம் உட்கோட்டத்தில் 11 வழக்குகள், செஞ்சி, கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் தலா 25 வழக்குகள் என மொத்தம் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தங்களது நலனை பற்றி சற்று சிந்தித்து அரசின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இதனை மீறி நடப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாலையில் திரிந்த பொதுமக்கள்: நூதன தண்டனை வழங்கியகாவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details