தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் 1,300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு! - villupuram district news

விழுப்புரம்: ஒட்டம்பட்டு, வீரபாண்டி பகுதியில் இன்று (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் 1,300 லிட்டர் கொள்ளவு கொண்ட கள்ளச்சாராய ஊறல்கள் அமலாக்கப்பிரிவு காவலர்களால் அழிக்கப்பட்டன.

சாரய ஊறல் அழிப்பு  கள்ளச்சாராய ஊறல் அழிப்பு  விழுப்புரம் மாவட்டச் செய்திகள்  villupuram district news  illicit arrack units
விழுப்புரம் பகுதியில் 1,300 லிட்டர் கொள்ளவு கொண்ட கள்ளச்சாரய ஊரல்கள் அழிப்பு

By

Published : Aug 4, 2020, 10:48 PM IST

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட மதுவிலக்கு அமலக்காப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 4) காலை அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி, ஒட்டம்பட்டு கிராமங்களில் ஆய்வு நடத்தினர்.

விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளச்சாராய ஊரல்

அப்போது, ஒட்டம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது நிலம், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சீனு, கோவிந்தன் ஆகியோர் நிலங்களில் தலா 400 லிட்டர் கொள்ளவு கொண்ட கள்ளச்சாரய ஊறல்கள் கண்டுபிடிக்க்கப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், 100 லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராய ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரே நாளில் 1,300 லிட்டர் அளவிலான ஊறல்களை விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் அழித்தனர்.

இதையும் படிங்க:அரகண்டநல்லூரில் கள்ளச்சாரயம் காய்ச்சியவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details