விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் - பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிய நிலையில், இளைய மகள் சரண்யா அருகிலுள்ள பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேவேந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், பெரியம்மாள் தனது மூன்று பிள்ளைகளையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய சரண்யா, வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.