தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஆரின் சாதனைகள் கல்விசாலை பாடங்களில் இடம்பெற வேண்டும்: ராமதாஸ் - Ramadoss

முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமியின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சாதனைகள் கல்விசாலை பாடங்களில் இடம்பெற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஆரின் சாதனைகள் கல்வி பாடங்களில் இடம்பெற வேண்டும்
ஓபிஆரின் சாதனைகள் கல்வி பாடங்களில் இடம்பெற வேண்டும்

By

Published : Feb 2, 2023, 4:09 PM IST

ஓமந்தூர் பி.ராமசாமியின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சாதனைகள் கல்வி பாடங்களில் இடம்பெற வேண்டும்

விழுப்புரம்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "உத்தமர் என்கிற சொல்லுக்கு அன்றிலிருந்து இன்று வரை சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஓமந்தூர் பி. ராமசாமி அவர்கள் மட்டுமே. ராஜாஜி அவர்கள் அன்றைய காலகட்டத்தில் வடஆற்காடு மாவட்டங்களான சித்தூர், நெல்லூர், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் மதுவிலக்கை கொண்டு வந்தார். ஆனால், 1948 - 1971ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பூரண முழு மதுவிலக்கை கொண்டு வந்தவர், ஓபிஆர். அவர் நடைமுறையில் மிகவும் எளிமையானவர்.

ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க சர்தார் வல்லபாய் பட்டேலுடன் இணைந்து அதற்காக பாடுபட்டவர். இன்றைய கல்விப் பாட புத்தகங்களில் ஓபிஆர் அவர்கள் குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும். ராமசாமி அவர்களுக்கு முதன்முதலாக சென்னையில் மிகப்பெரிய பந்தல் தோரணங்களுடன் நூற்றாண்டு விழா எடுத்தது நான் தான். விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் அவர் பிறந்து வளர்ந்துள்ளார். இது நமக்கெல்லாம் பெருமை.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் இளம் வயதிலேயே சட்டம் பயின்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்தவர்.

விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பு, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோள்களுடன் ஆட்சியை நடத்தியவர் ஓபிஆர். அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்தவர்.

எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர், நேர்மையும் துணிச்சலும் மிக்க கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்பட்ட இவர் 1970-ம் ஆண்டில் தனது 75-வது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு இவரது நினைவாக சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசு இவரின் நினைவாக தபால் தலையும் வெளியிட்டது" என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி: கி.வீரமணி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details