தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1000 லிட்டர் எரிசாராயம் கொட்டி அழிப்பு! - Alcohol Prevention Police seize fuel

விழுப்புரம்: தென்பெண்ணையாற்றில் 1,115 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பாதுகாப்பான முறையில் கொட்டி அழித்தனர்.

erisarayam
erisarayam

By

Published : Dec 29, 2019, 11:53 PM IST

விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 29 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,115 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இந்த எரிசாராயத்தை அழிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி எரிசாராயத்தை அழிக்க நீதிபதி நளினி தேவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைகண்காணிப்பாளர் மேற்பார்வையில், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,115 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பாதுகாப்பான முறையில் கொட்டி அழித்தனர்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் கோவையில் பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details