தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரக்காணம் மீனவர் வலையில் சிக்கிய 10 கிலோ அம்பர்கிரிஸ்! - திமிங்கல எச்சம்

மரக்காணம் மீனவர்கள் வலையில் சிக்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சம்(Ambergris) குறித்து போலீசார் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 20, 2023, 3:53 PM IST

விழுப்புரம்:மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 38). இவர் சக மீனவர்களுடன் இன்று காலை வழக்கம் போல் விசைப்படையில் கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்பி உள்ளார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் சேர்த்து ஒரு மர்ம பொருள் இருந்துள்ளது.

இதனைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த அவர் பின்னர், திமிங்கலத்தின் எச்சம் எனப்படும் அம்பர்கிரிஸாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

வினோத் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் 10 கிலோ எடையுள்ள பொருளை பார்வையிட்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்னர், அது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கக்கூடும் ஆனாலும் இதனை முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்று கூறி அதனை எடுத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details