தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

விழுப்புரம் அருகே  15 வயது அரசு பள்ளி மாணவியை தாய்மாமன் உட்பட 10 பேர் சேர்ந்து தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டுப்பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர் உட்பட 3 பேரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போக்சோவில் கைது
போக்சோவில் கைது

By

Published : Mar 31, 2022, 6:51 AM IST

விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே கூலி தொழிலாளியின் 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியை அழைத்து விசாரணை செய்துள்ளார்.

கூட்டுப்பாலியல் வன்புணர்வு:அப்போது அவர் தாய்மாமன் சசி என்பவர் பல நாட்களாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்வதாகவும், அவருடன் அவரது நண்பர்கள் 9 பேர் இணைந்து வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் கூட்டுப்பாலியலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளித்துள்ளார்.

போக்சோவில் கைது: இச்சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட உறவினரான சசி, மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போக்சோவில் கைது

தவறுகளை தடுக்க முயற்சி செய்யுங்கள்: பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், தமிழ்நாடு அரசு இது போன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

புகார் எண்கள்:பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இது போன்று அவசியமற்ற செயல்களினால் வரும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் பெற்றோர்களின் மேற்பார்வையோடு அணுகுவதே மிகச் சிறந்தத் தீர்வாகும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யுங்கள்.

இதையும் படிங்க: EXCLUSIVE: 'பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால் சீனா செல்லமாட்டார்' - பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி

ABOUT THE AUTHOR

...view details