விழுப்புரம்: திண்டிவனத்தில் ரயில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்கிறார்களா என்ற சோதனையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று (நவ.02) மாலை 6 மணியளவில் ஒரு பயணி புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேசஞ்சர் ரயிலில் செல்வதற்காக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில்வே பிளாட்பாரத்திற்கு வந்தார்.
அவர் வைத்திருந்த லக்கேஜை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடையுள்ள தங்க நெக்லஸ் நகைகள் இருந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு டை அலுவலர்கள், அந்நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீபக் தயாலால் சோனி (43) என்பது தெரியவந்தது.