வேலூர் மாவட்டம், பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, நேற்று முன் தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆபாசமாக புகைப்படம் எடுத்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞர்கள் போக்சோவில் கைது! - Vellore District News
வேலூர் : 15 வயது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, தற்கொலைக்குத் தூண்டிய இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் 90 சதவிகித தீக்காயங்களுடன் பிழைத்து உயிருக்குப் போராடி வரும் சிறுமி, தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பாகாயம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட மூன்று இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ்காவல் துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்களில் கணபதி (வயது 19), ஆகாஷ் (வயது 22) ஆகிய இருவரை மட்டும் 15 நாள் நீதிமன்றக் காவலில் குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தற்போதைய கரோனா பரவல் சூழலில், குற்றத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத காரணத்தால் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐந்து வயது குழந்தைக்கு பாலியில் தொல்லை: கல்லூரி மாணவன் போக்சோவில் கைது