வேலூர்:முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், சிவகுமார் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை சிவகுமார் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் சிறுமி மீட்பு
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர். அப்போது, சிவகுமார் சிறுமியை கடத்திச் சென்று தொரப்பாடியில் உள்ள வீட்டில் தங்க வைத்திருந்ததை அறிந்து அவ்விடம் சென்ற காவல் துறையினர், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர், சிறுமிக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, இளைஞர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய சிறுவன் கைது