தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலி வீடு புகுந்து காதலன் தாக்குதல் - ஷாக்கிங் சிசிடிவி காட்சி - youngster attack with knife

குடியாத்தம் அருகே காதலி பிரிந்து சென்ற விரக்தியில், அவரது வீட்டுக்குள் புகுந்த காதலன் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

vellore
குடியாத்தம்

By

Published : Jul 27, 2021, 10:49 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ரோடு வீரசிவாஜி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(60). இவரது மனைவி சசிகலா (47). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் மேனிஷா (22) பெற்றோருடன் வசித்துவருகிறார்.

அதே போல, குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த முகேஷ் (29), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் சந்திரசேகரின் மகள் மேனிஷாவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், திருமணமானதை அறிந்த மோனிஷாவின் பெற்றோர், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, திருமணமான நாளிலே அழைத்து சென்றதாக தெரிகிறது.

தொடர்ந்து, சில நாள்களுக்கு முன்பு மோனிஷாவின் வீட்டுக்கு சென்ற மகேஷ், மனைவியை அனுப்பி வைக்குமாறு, அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

காதலியின் தந்தை உட்பட 3 பேருக்கு கத்தி குத்து

முகேஷ், மோனிஷா இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தன்னை மிரட்டி திருமணம் செய்ததாக மேனிஷா தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கு அறிவுரை கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

ரகசியமாக வீட்டுக்குள் புகுந்த காதலன்

இருப்பினும், மனைவியின் பிரிவால் மனமுடைந்த முகேஷ், இன்று (ஜூலை.27) காலை அவரை காண ரகசியமாக மோனிஷா வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

அப்போது சந்திரசேகர் முகேஷை பார்த்து சத்தமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரை சரமாரியாக குத்தியுள்ளார்.

காதலி தந்தை உட்பட மூவருக்கு கத்திக்குத்து

தொடர்ந்து, அவரது மனைவி சசிகலாவையும், வீட்டிலிருந்த 2ஆவது மகளையும் சரமாரியாக குத்தியுள்ளார். இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அந்த வீட்டின் மாடிக்கு சென்ற முகேஷ், அங்கிருந்து குதித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் சிக்கிய அவர், தூக்கி வீசப்பட்டார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் நால்வரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, நால்வரும் மேல் சிகிச்சைக்காக வேலூர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details