வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் மகள் (15) வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடம் விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் தீக்காயத்துடன் இருந்த சிறுமியை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் உடலில் 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”நான் தச்சு வேலை செய்கிறேன் எனது மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகிறார். எனது மகள் அரசுப் பள்ளியில் 10வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பு செல்கிறார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்தார்.