வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஷாத், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் இருவரும் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், வார விடுமுறையான நேற்று இருவரும், திருவொற்றியூர் திருச்சினகுப்பம் கடல்பகுதியில் பகுதியில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் கடலின் ஆழமான பகுதியில் மூழ்கினர்.
கடலில் மூழ்கிய இளைஞர்கள்; சடலமாக கரை ஒதுங்கிய சோகம்! - கடலில் மூழ்கிய இளைஞர்கள்
திருவொற்றியூர்: வார விடுமுறையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. மற்றொரு இளைஞரை கடற்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதைக் கண்ட மீனவர்கள் இருவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல்கள் கிடைக்காததால் கடலிலிருந்து வெளியேறினர். ஒரு மணி நேரத்திற்குப் பின் நிஜாமுதீன் உடல் மட்டும் சடலமாக கரை ஒதுங்கியது. ஆனால் இர்ஷாத் உடல் கிடைக்காததால் மீனவர்களுடன் சேர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு இல்லாததால் திருவொற்றியூர் கடல் பகுதியில் அடிக்கடி கடலில் மூழ்கி இளைஞர்கள், மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.