வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வாரசந்தைப் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டிராகன் ரயில், ராட்டினம் போன்ற விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை வேடிக்கை பார்க்கச் சென்ற வாணியம்பாடி காவாக்கரை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவன் விஷ்ணு, அங்கு அமைக்கப்பட்டிருந்த டிராகன் ரயில் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தபோது அருகில் சென்றதாக கூறப்படுகிறது.
டிராகன் ரயிலில் சிக்கித் தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி! - gaint wheeler
வேலூர்: பொழுது போக்கிற்காக போடப்பட்ட டிராகன் ரயிலில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிராகன்" ரயிலில் சிக்கித் தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி!
அப்பொழுது, டிராகன் ரயில் சக்கரத்தில் விஷ்ணு எதிர்பாராத விதமாக சிக்கித் தூக்கிவீசப்பட்டதில் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
மேலும், உரிய அனுமதியின்றி இப்பொழுதுபோக்கு அமைப்புகள் அமைக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் முன்னெச்சரிக்கைக்காக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.