தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் கோட்டையில் புனித் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு - புனித் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம்

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

v
v

By

Published : Nov 3, 2021, 4:18 PM IST

தமிழ்நாட்டில் பிறந்த கன்னட திரைப்பட நடிகரும் சமூக சேவகருமான புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பிரபு, சிவகார்த்திகேயன், ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் சமூக ஆர்வலர் சிவா தலைமையில் புனித் ராஜ்குமாரின் திருஉருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபத்தை ஆலய செயலாளர் சுரேஷ்குமார் ஏற்றி வைத்தார். இதில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு புனித் ராஜ்குமார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக இளையராஜா புனித் ராஜ்குமாரின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

ABOUT THE AUTHOR

...view details