கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசம் வழங்கவதற்காக, அதனைத் தயாரிக்க பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. அப்படி வேலூரில் உள்ள வெல்மா மகளிர் சுய உதவிக்குழு மையத்தில் நடைபெற்றுவரும் அந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வுசெய்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனாவால் முகக்கவசம், கிருமிநாசினி, சானிடைசர் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிகட்டவும், குறைந்த விலையில் முகக்கவசம் வழங்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.