தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயரிழப்பு - வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயரிழப்பு

வேலூர்: லத்தேரி பகுதியில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

student death at school campus
Death at school campus

By

Published : Jan 23, 2020, 7:29 PM IST

வேலூர் மாவட்டம் லத்தேரி, சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகள் நிவேதினி குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்.

ஆசிரியர்கள் மாணவியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற நிவேதினியின் பெற்றோர்கள் மகள் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நிவேதினியின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் நிவேதினிக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் எனவும், சம்பவத்தன்று அதிகளவில் வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் நிவேதினி உயிரிழப்புக்கு வேறு எதாவது காரணமா, பள்ளியில் வேறு எதாவது தவறு நடந்துள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவியின் சிசிடிவி காட்சி

இதுகுறித்து நிவேதினி பெற்றோர் தரப்பிடம் கேட்டபோது "எனது மகளுக்கு வலிப்பு நோய் உள்ளது, பள்ளி நிர்வாகம் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றனர். பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, "மாணவிக்கு உடல்நலம் சரியில்லை என்ற உடனே அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றனர்.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் சேர்க்கை குறைவு - 1,706 ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details