அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள், பிற நோயாளிகளை பார்க்கவரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.
இங்கு 40 வயதான பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் சுற்றிசுற்றி வந்தார்.
இந்நிலையில் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், காலில் கிடந்த செருப்பை கழட்டி சில்மிஷ இளைஞரை பளார் பளார் என்று ஒங்கி அறைவிட்டார்.