ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. துணி வியாபாரம் செய்துவரும் இவர், தன்னுடைய தாயின் மருத்துவச் சிகிச்சைக்காக சங்கரி என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயயை, தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அடைமானம் வைத்து பெற்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக முறையாக வட்டி செலுத்திவந்த மீனா, சில மாதங்களுக்கு முன்பாக மொத்த தொகையையும் திருப்பி செலுத்தியுள்ளார்.
கந்துவட்டி தொல்லை: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்த பெண் - கந்துவட்டி தொல்லை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராணிப்பேட்டை: பணம் கேட்டு தனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
women petition against Usury interest person
ஆனால், சிவசங்கரி அதிகமாக வட்டி கணக்கிட்டு, மொத்தமாக 19 லட்சம் ரூபாய் மீனாவிடம் கேட்டுள்ளார். மேலும் சில அடியாட்களை வைத்து மீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனவே மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிவசங்கரியிடமிருந்து வீட்டுப் பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மீனா மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவி துணி மாற்றுவதை படம் பிடித்தவர் மீது புகார் அளித்த கணவர் மீது தாக்குதல்!