தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் ரயிலில் தூக்க கலக்கத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி! - Women falls of in a running train

வேலூர்: தூக்க கலக்கத்தில் கழிவறை கதவிற்கு பதிலாக ஓடும் ரயிலின் படிக்கட்டு கதவை திறந்த பெண் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

train

By

Published : Jul 14, 2019, 10:50 PM IST

பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த நடராஜன், அவரது மனைவி உமாதேவியுடன் நேற்று இரவு 9.15 மணிக்கு சென்னையிலிருந்து காவேரி விரைவு ரயிலில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார். இந்த ரயில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியில் நள்ளிரவு 12.50 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது உமாதேவி கழிவறை செல்வதற்காக தூக்க கலக்கத்தில் எழுந்து வந்துள்ளார்.

அப்போது தூக்க கலக்கத்தில் கழிவறை கதவினை திறப்பதாக நினைத்து பயணிகள் ஏறும் படிகட்டின் கதவினை திறந்துள்ளார். இதில் நிலை தடுமாறிய உமாதேவி ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் இரவு முழுவதும் ரயில்வே தண்டவாளம் அருகே முட்புதரில் சுமார் ஏழு மணி நேரம் மயங்கிய நிலையில் கிடந்த உமாதேவியை காலையிலேயே அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு உமாதேவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகெலும்பு உடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details