தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் யானை தாக்கி பெண் பலி.. நேற்று ஆந்திராவில் இருவரை கொன்ற அதே யானை என தகவல்! - elephant attack

Vellore Elephant attack: ஆந்திர மாநிலம் சித்தூரில் காட்டு யானை தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், இன்று காட்பாடி அருகே அதே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த பெண் மற்றும் யானை கோப்புப்படம்
யானை தாக்கி உயிரிழந்த பெண் மற்றும் யானை கோப்புப்படம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 1:21 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பெரியபோடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி வசந்தா (60). இவர்கள் பெரியபோடிநத்தம் கிராமத்திற்உ வெளியே வசித்து வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 31) காலை 6 மணி அளவில் வீட்டிற்கு வெளியே கால்நடைகளில் அலறல் சத்தம் கேட்டு வசத்தா சென்று பார்த்துள்ளார்.

அப்போது, காட்டு யானை ஒன்று ஆடுகளை தாக்கிக்கொண்டிருந்ததை கண்டு கால்நடைகளை காப்பாற்றுவதற்காக சென்றதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த யானை வசந்தாவை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியதோடு, அவரை மிதித்தது இதில் காயமடைந்த வசந்த நிகழ்விடத்திலேயே உயிழந்தார்.

இதையும் படிங்க:"உடலுறுப்பு தானம் செய்து கடவுளாக மாறுவோம்" - வேலூர் விழாவில் ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு

நேற்று, ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டல் ராமாபுரம் எனும் கிராமத்தில் இதே யானை வெங்கடேசன் - செல்வி ஆகிய இருவரை மிதித்து கொன்ற நிலையில், இன்று ஆந்திரா - தமிழகம் எல்லை பகுதியான காட்பாடி பகுதியில் வசந்தாவை கொன்றுள்ளது.

இதனால் எல்லைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளன. வனத்துறையினர் துரிதமான நடவடிக்கை எடுத்து யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மேகமலையில் 7,000 ஏக்கர் தனி நபர்களுக்கு பட்டா விவகாரம்: நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details